சுவிஸ்

நாய் என்று சொல்லி வீட்டுத் தோட்டத்தில் வளர்த்த ஓநாய்: பெர்ன் மாநிலத்தில் அம்பலம்

பெர்ன் மாநிலத்தில் (Bern) ஒருவர் தன் வீட்டுத் தோட்டத்தில் ஓநாயை நாய் என்று சொல்லி வளர்த்தது தெரியவந்துள்ளது. சுவிஸ் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் (OFDF) வியாழக்கிழமை இதை அறிவித்தது.

யாரோ கொடுத்த தகவலைத் தொடர்ந்து, மாநில கால்நடை அலுவலகம் அந்த விலங்கை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தியது. அது நாய் இல்லை, ஓநாய் என்று முடிவு வந்தது. அதற்கு இரண்டரை வயது.

அந்த ஓநாய் விலங்குப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் புறம்பான நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்து, ஓநாய்க்கு ஏற்ற பராமரிப்பு மையத்தில் விட்டுள்ளனர்.

நவம்பர் 4 முதல் OFDF விசாரித்து வருகிறது. ஓநாய் குட்டியாக இருந்தபோதே சட்டவிரோதமாக சுவிஸுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கண்டறிந்துள்ளது. உரிமையாளரிடம் நாய்களுக்கான ஐரோப்பிய செல்லப்பிராணி பாஸ்போர்ட்டும் இருந்தது. எந்த நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்பதை அதிகாரிகள் சொல்லவில்லை.

ஓநாய் பாதுகாக்கப்பட்ட இனம். அதைக் கொண்டுவரவும் வளர்க்கவும் மிகக் கடுமையான விதிகள் உள்ளன. வந்த நாட்டின் சான்றிதழும், சுவிஸ் மத்திய அரசின் அனுமதியும் வேண்டும். இது எப்படி நடந்தது என்பதை அறிய விசாரணை தொடர்கிறது.


மூலம்: Le Matin
புகைப்படம்: Tatyana Rubleva / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button