சுவிஸ் பார்சல் டெலிவரி நிறுவனமான பிளான்சர் (Planzer) மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பல பார்சல்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் ஆன்லைன் கடையான கலக்சஸ் (Galaxus) ஆர்டர்களும் அடங்கும்.
வியாழன் காலை கலக்சஸ்தான் இதை முதலில் அறிவித்தது. திருடப்பட்டவற்றில் மிகப் புதிய தகவல்கள் 2023 தொடக்கத்தைச் சேர்ந்தவை என்றும் சொன்னது.
கலக்சஸ் ஆர்டர்களில் இருந்து பெயர், டெலிவரி முகவரி, ஈமெயில் முகவரி, பார்சல் எண் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. சிலருடைய போன் நம்பரும் போயிருக்கிறது. ஈமெயில், SMS, போன் அழைப்புகள் மூலம் வரும் மோசடிகளில் கவனமாக இருக்குமாறு கலக்சஸ் தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. கலக்சஸ் சிஸ்டம்கள் தாக்கப்படவில்லை.
பிளான்சரின் வாடிக்கையாளர் இணையதளத்துக்கான லாகின் தகவல்களையும் ஹேக்கர்கள் எடுத்துள்ளனர். ஆனால் அவை ரகசிய குறியீட்டில் மாற்றப்பட்டவை (encrypted). பார்சல் வாங்குபவர்களுக்கான தளத்தின் லாகின் தகவல்களும், பணம் செலுத்திய விவரங்களும் திருடப்படவில்லை.
எத்தனை பேரின் தகவல்கள் போயின என்பது இன்னும் தெரியவில்லை. கலக்சஸ் தவிர வேறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டனவா என்பதும் தெரியவில்லை. பிளான்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது. குற்றவியல் புகாரும் கொடுக்கப்போகிறது.
புதன் மாலை, விளையாட்டுப் பொருட்களை ஆன்லைனில் விற்கும் ஒக்ஸ்னர் ஸ்போர்ட்டும் (Ochsner Sport) இதே மாதிரி ஹேக்கர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவித்தது.
மூலம்: RSI
புகைப்படம்: Rowan Freeman / Unsplash





