தெசின் மாநிலத்தில் (Ticino) ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை வெறும் 1 பிராங்குக்கு ஏலத்தில் விடுகிறார்கள். லுகானோ (Lugano) நகரின் கடன் வசூல் அலுவலகம் (Office des poursuites) இந்த ஏலத்தை நடத்துகிறது.
ஆனால் இது ஓடுகிற கார் இல்லை. முழுவதுமாக எரிந்து போன கார். ஓட்டவே முடியாது. படத்தைப் பார்த்தால் கார் என்றே சொல்ல முடியாது. அடிச்சட்டம்கூட தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை ஏலம் கேட்கலாம். இதுவரை யாரும் கேட்கவில்லை.
வாங்குபவருக்கு வேறு செலவுகளும் இருக்கு. காரை சுவிஸிலேயே வைத்திருந்தால் சுங்கக் கட்டணம் கட்ட வேண்டும். வெளிநாட்டுக்குக் கொண்டு போனால், வழிப்போக்குவரத்துக்கான சுங்க வேலைகளை முடிக்க வேண்டும்.
இந்தக் கார் முன்பு வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டது. உத்தரவாதம் எதுவும் கிடையாது. யாராவது பழுது பார்த்து ஓட்டலாம் என்று நினைத்தாலும், சுவிஸில் ஓட அனுமதி கிடைக்கும் என்று உறுதியில்லை.
ஏலம் முடிந்ததும் வாங்குபவர் ஒரு வாரத்துக்குள் பணம் கட்ட வேண்டும். பத்து நாளுக்குள் எஞ்சியிருப்பதை எடுத்துப் போக வேண்டும்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Odinei Ribeiro / Unsplash





