அமெரிக்கா சுவிஸ் உட்பட 14 வர்த்தகப் பங்காளி நாடுகளின் மீது புதிய இறக்குமதி வரி விதிக்கப் போகிறது. சுவிஸ் பொருட்களுக்கு 15 சதவீத வரி போடப்படும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) அறிவித்தார்.
இப்போது சுவிஸ் பொருட்களுக்கு 12.5 சதவீத வரி உள்ளது. அதாவது வரி கொஞ்சம் கூடும். சில பொருட்களுக்கு வரி விலக்கு உண்டு என்று கிரீர் சொன்னார். ஆனால் எந்தப் பொருட்கள் என்று சொல்லவில்லை.
சுவிஸ் மத்திய அரசு (Bundesrat) புதன்கிழமைக் கூட்டத்தில் இதைப் பற்றிப் பேசியது. அரசின் பேச்சாளர் நிக்கோல் லாமோன் (Nicole Lamon) செய்தியை உறுதிப்படுத்தினார். ஆனால் அரசு இன்னும் பகிரங்கமாகக் கருத்துச் சொல்லவில்லை.
15 சதவீதம் என்பது கடந்த நவம்பரில் இரு நாடுகளும் முறைசாரா முறையில் பேசி ஒப்புக்கொண்ட அளவுதான். ஐரோப்பிய ஒன்றியம் உடனே எதிர்ப்புத் தெரிவித்தது. புதிய வரி எந்தப் பொருட்களுக்கு, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
கடந்த ஆண்டு அமெரிக்கா சுவிஸ் பொருட்களுக்கு மிக அதிக வரி போட்டது. பிறகு நவம்பரில் இரு நாடுகளும் பேசி வரியைக் குறைத்தன. பிப்ரவரி 2026-ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்த வரிகளில் பெரும்பாலானவை சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது.
மூலம்: RSI
புகைப்படம்: Markus Winkler / Unsplash





