சுவிஸ்

மெர்கோசூர் ஒப்பந்தம்: வாக்கெடுப்பைக் கேட்கப் போவதில்லை என்ற சுவிஸ் விவசாயிகள்

சுவிஸ் விவசாயிகள் சங்கம், மெர்கோசூர் (Mercosur) வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரான மக்கள் வாக்கெடுப்பை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. புதன்கிழமை நடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மெர்கோசூர் என்பது அர்ஜென்டினா, பிரேசில், பாராகுவே, உருகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகளின் வர்த்தகக் கூட்டமைப்பு. சுவிஸ், நோர்வே, ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் இவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. சுவிஸ் நாடாளுமன்றம் கடந்த செப்டம்பரில் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.

விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பை ஈடுகட்ட, அரசு ஆறு ஆண்டுகளுக்கு 517 மில்லியன் பிராங்க் உதவி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் சங்கம் வாக்கெடுப்பு கேட்கவில்லை.

ஆனாலும் விவசாயிகளுக்கு கவலை தீரவில்லை. அடுத்த ஆண்டு விவசாய நிதியில் கிட்டத்தட்ட 100 மில்லியன் பிராங்கை அரசு குறைக்கப் போகிறது. 2030 முதல் 2033 வரைக்கும் பெரிய வெட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே சிரமத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு மேலும் சுமை என்று சங்கம் சொல்கிறது. இந்த வெட்டுகளை நாடாளுமன்றம் திருத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பெண் விவசாயிகள் பற்றியும் பேசப்பட்டது. 2026-ஐ ஐக்கிய நாடுகள் சபை பெண் விவசாயிகளின் ஆண்டாக அறிவித்துள்ளது. சங்கத்தின் குழுக்களில் பெண்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்ற அறிவிப்பை பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். இதற்கான திட்டங்களை ஒரு குழு தயாரிக்கும். ஆனால் இதே கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து புதிய நிர்வாக உறுப்பினர்களும் ஆண்களே.


மூலம்: RSI
புகைப்படம்: Tiffany Bell / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button