லுகானோ விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். டிச்சினோ மாநிலத்தின் (Ticino) அக்னோ (Agno), பியோஜியோ (Bioggio), முசானோ (Muzzano) நகராட்சிகள் இதை அறிவித்துள்ளன.
முதல் காரணம் க்னீ சர்க்கஸ். ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் இந்தப் பகுதியில்தான் சர்க்கஸ் கூடாரம் போடப்படும். இந்த முறை நவம்பர் 27, 28, 29 தேதிகளிலும், டிசம்பர் 4, 5, 6 தேதிகளிலும் நிகழ்ச்சிகள் நடக்கும். நிறைய பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டாவது காரணம் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் (OSCE) அமைச்சர்கள் மாநாடு. இது டிசம்பர் 3, 4 தேதிகளில் லுகானோவில் நடக்கிறது. அந்த நாட்களில் விமான நிலையத்தில் விமானங்களின் போக்குவரத்து கூடும். அதனால் சத்தமும் அதிகமாக இருக்கும் என்று நகராட்சிகள் சொல்கின்றன.
இதைச் சமாளிக்க மூன்று நகராட்சிகளும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. வேலைக்குச் செல்பவர்களும் சர்க்கஸ் பார்க்க வருபவர்களும் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளன. குறிப்பாக லுகானோ – பொந்தே த்ரேசா (Ponte Tresa) ட்ரெயின் (FLP) வழியாகச் செல்லுமாறு கூறியுள்ளன.
மூலம்: RSI
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





