சுவிஸ்

சுவிஸில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைந்தது

சுவிஸ் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் (Bleifrei 95) 1.83 பிராங்க்.

உயர்தர பெட்ரோல் (Bleifrei 98) விலை 6 ராப்பன் குறைந்து, ஒரு லிட்டர் 1.94 பிராங்க் ஆனது. டீசல் விலையும் அதே அளவு, 6 ராப்பன் குறைந்துள்ளது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கியதே முக்கியக் காரணம். வடகடல் கச்சா எண்ணெய் (Brent) ஒரு பீப்பாய் அக்டோபர் இறுதியில் சுமார் 115 டாலராக இருந்தது. இப்போது 90 டாலரைவிடச் சற்றுக் கூடுதலாக மட்டுமே உள்ளது.

ரைன் ஆற்றின் (Rhein) நீர்மட்டம் உயர்வதும் விலை குறைய உதவலாம். பல மாதங்களாக ஆற்றில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. இப்போது தொடர்ந்து மழை பெய்வதால் நீர்மட்டம் மீண்டும் நன்றாக உயர்ந்து வருகிறது.


மூலம்: SRF
புகைப்படம்: Dawn McDonald / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button