சுவிஸ்

லூசெர்ன் மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: 3 ஊர்களில் புதிய கட்டுப்பாடுகள்

லூசெர்ன் மாநிலத்தில் (Luzern) உள்ள ஹோக்டோர்ஃப் (Hochdorf), ரோமர்ஸ்வில் (Römerswil), ரைன் (Rain) ஆகிய மூன்று ஊர்களில் நவம்பர் 28 முதல் தண்ணீர் பயன்பாட்டுக்குப் புதிய கட்டுப்பாடுகள் வருகின்றன. நிலத்தடி நீர் மிகவும் குறைந்து போனதே காரணம்.

மழை பெய்தாலும் நிலைமை மாறவில்லை. ஹோக்டோர்ஃபில் ஊற்றுகளில் பல வாரங்களாகத் தண்ணீரே வருவதில்லை. நிலத்தடி நீர் மட்டம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது. இப்போதைக்கு மற்ற நீர் வழங்கல் அமைப்புகளிலிருந்து அவசரக் குழாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. அதனால் வீடுகளுக்குத் தண்ணீர் தடைபடவில்லை.

புதிய விதிகளின்படி புல்தரைக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது. வீட்டு முற்றத்தையோ சுவரையோ தண்ணீரில் கழுவக் கூடாது. நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்பக் கூடாது. வாகனத்தை வேலைக்காகவோ பாதுகாப்புக்காகவோ கழுவ வேண்டியிருந்தால் மட்டுமே கழுவலாம். அதுவும் தண்ணீரை மறுபடி பயன்படுத்தும் இடத்தில்தான். நிறுவனங்களும் பண்ணைகளும் பொது அமைப்புகளும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஹோக்டோர்ஃப் ஏற்கனவே ஜூலையிலும் ஆகஸ்டிலும் துண்டுப் பிரசுரம் அனுப்பி, தண்ணீரைச் சேமிக்கச் சொன்னது. பொது நீரூற்றுகளை நிறுத்தியது. பூங்கா புல்வெளிகளுக்குத் தண்ணீர் விடுவதையும் நிறுத்தியது. ஆனாலும் தண்ணீர் பயன்பாடு கடந்த ஆண்டு அளவிலேயே இருக்கிறது.

குளிர்காலத்தில் போதுமான மழை பெய்யாவிட்டால், வசந்த காலத்திலும் கோடையிலும் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று ஊர் நிர்வாகம் கவலைப்படுகிறது. எதிர்காலத்துக்காக ரோய்ஸ் பள்ளத்தாக்கு (Reusstal) பக்கம் ஒரு புதிய குழாய் அமைக்கத் திட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கு நேரம் ஆகும். அதுவரை தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி.


மூலம்: SRF
புகைப்படம்: Md. Hasanuzzaman Himel / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button