சுவிஸ்

வோ மாநிலத்தில் மோசடிக் கும்பல் சிக்கியது: போலீசிடமிருந்து தப்ப லெமன் ஏரியில் குதித்த இளைஞர்

வோ மாநிலத்தில் (Vaud) சில நாட்களுக்குள் மோசடி வழக்குகளில் 9 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இவர்களிடமிருந்து 2 லட்சம் பிராங்குக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நவம்பர் 10 அன்று மூதோன் (Moudon), ரூழ்மோன் (Rougemont), நியோன் (Nyon) பகுதிகளில் ஒரு குழுவினர் பிடிபட்டனர். இவர்கள் போலீஸ்காரர், வங்கி அதிகாரி, போன் கம்பனி ஊழியர் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. பணத்துடன் நகைகளும் வங்கி கார்டுகளும் கிடைத்தன.

இவர்களில் இருவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது. ஒருவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார். மூவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். இன்னொருவரை வாலே மாநில (Valais) நீதித்துறையிடம் ஒப்படைத்தனர்.

மூன்று நாட்கள் கழித்து வெவே (Vevey) நகரில் போலீஸ் வாகனச் சோதனை நடத்தியது. அப்போது 26 வயதான ஒரு பிரெஞ்சுக்காரர் தப்பிக்க லெமன் ஏரியில் குதித்தார். போலீஸ் அவரைப் பிடித்தது. காரை ஓட்டிய பெண்ணும் கைது செய்யப்பட்டார். வங்கி அதிகாரி என்று ஏமாற்றி வாங்கிய பணம் அவர்களிடம் இருந்தது. இருவரும் விசாரணைக் காவலில் உள்ளனர்.

இப்படிப்பட்ட மோசடிகள் அதிகரிப்பதாக போலீஸ் கூறுகிறது. தெரியாதவர்களிடம் பணத்தையோ வங்கிக் கோட் எண்களையோ ஒருபோதும் கொடுக்கக் கூடாது என்றும் நினைவூட்டியுள்ளது.


மூலம்: Le Matin
புகைப்படம்: Xavier von Erlach / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button