சுவிஸ்

SVP வேட்பாளர்கள் ஏஷி, கிராபர்: இருவரும் “அரசியல் இரட்டையர்கள்”?

சுவிஸ் மக்கள் கட்சி (SVP) மத்திய அரசுக்கான (Bundesrat) தன் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தாமஸ் ஏஷி (Thomas Aeschi), மிஷேல் கிராபர் (Michael Graber) இருவரும் கொள்கையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று பல கட்சிகள் குறை சொல்கின்றன.

பெர்ன் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் ஆட்ரியன் வாட்டர் (Adrian Vatter) இதையே சொல்கிறார். இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்களுக்கு (Bilaterale III) எதிரானவர்கள். அகதிகள் விஷயத்தில் கடுமையான கொள்கையை ஆதரிக்கிறார்கள். நடுநிலைமை முன்முயற்சிக்கும் ஆதரவு கொடுத்தவர்கள். அதனால் மக்களுக்கு உண்மையான தேர்வு இல்லை என்பது விமர்சகர்களின் வாதம்.

ஏஷி சூக் மாநிலத்தைச் (Zug) சேர்ந்தவர். பொருளாதார நிபுணர், ஹார்வர்டில் படித்தவர். 2011 முதல் தேசிய சபை உறுப்பினர். கடந்த 9 ஆண்டுகளாக SVP நாடாளுமன்றக் குழுவின் தலைவர். 2015-லும் மத்திய அரசுக்கு முயன்று தோற்றவர்.

கிராபர் வலே மாநிலத்தைச் (Valais) சேர்ந்த வழக்கறிஞர். 2021 முதல் தேசிய சபை உறுப்பினர். சுற்றுச்சூழல், மின்சக்தி, காலநிலை விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். 2019 முதல் ப்ரிக்-கிளிஸ் (Brig-Glis) நகர சபையிலும் இருக்கிறார்.

இப்போதைக்கு ஏஷி முன்னணியில் இருப்பதாக வாட்டர் சொல்கிறார். அவர் அதிகம் அறியப்பட்டவர். கட்சியின் திட்டங்களை வகுக்கும் நிபுணர் என்ற பெயரும் உண்டு. யார் சிறந்த மத்திய அரசு உறுப்பினராக இருப்பார் என்று இப்போதே சொல்ல முடியாது என்கிறார். மற்ற கட்சிகளிடம் இருவரும் ஒன்றை நிரூபிக்க வேண்டும்: குழுவாக இணைந்து செயல்படுவார்கள், கடினமான நேரங்களிலும் தாக்குப்பிடிப்பார்கள் என்பதே அது.


மூலம்: SRF
புகைப்படம்: Andreas Fischinger / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button