சுவிஸ் ஆர்கவ் மாநிலத்தில் (Aargau) ஒரு ஹோட்டல் அறைகளை அடித்து நொறுக்கிய 47 வயது சுவிஸ் நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்றே அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
சம்பவம் ஆகஸ்ட் மாத நடுவில் டியூபென்தால் (Teufenthal) ஊரில் நடந்தது. அவர் பூட்டிய கதவை உடைத்து ஒரு அறைக்குள் நுழைந்தார். குளியலறையில் கண்ணாடியை உடைத்தார். டாய்லெட்டை வேண்டுமென்றே அடைத்தார். மலத்தையும் குளியலறைப் பொருட்களில் பூசி வைத்தார்.
ஐந்து நாட்கள் கழித்து அதே ஹோட்டலுக்கு மீண்டும் வந்தார். இன்னொரு கதவை உடைத்து, டாய்லெட் டாங்கை சேதப்படுத்தினார். அறையில் இருந்த டிவியையும் அடித்தார். ஏன் இப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பும் இவர் செய்தியில் அடிபட்டார். மென்சிகன் (Menziken) ஊரில் உண்மையான துப்பாக்கி போலத் தெரிந்த ஒன்றை இவர் வைத்திருந்ததைப் பலர் பார்த்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். விசாரித்தபோது அது பழுதான போலி துப்பாக்கி என்று தெரிந்தது.
இவை எல்லாவற்றுக்கும் மாநில பொது வழக்கறிஞர் அலுவலகம் (Ministère public) 1800 பிராங்க் அபராதம் விதித்தது. வழக்குச் செலவு 900 பிராங்க் சேர்த்து மொத்தம் 2700 பிராங்க் கட்ட வேண்டும். இவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
மூலம்: Le Matin
புகைப்படம்: wang binghua / Unsplash





