சுவிஸ்

போலி மருந்தாளுநர் சுவிசில் சுதந்திரமாக: ஸ்பெயின் தேடியும் கைது இல்லை

ஸ்பெயின் நாடு தேடும் ஒரு பெண், நொய்ஷாட்டல் மாநிலத்தில் (Neuchâtel) சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இவர் போலி மருந்தாளுநர் என்று தெரியவந்துள்ளது.

லிண்டா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இந்தப் பெண், மருத்துவத் தொழிலை சட்டவிரோதமாகச் செய்ததற்காக ஸ்பெயினில் வழக்கை எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் ஐரோப்பாவில் அதிகம் தேடப்படுபவர்களின் பட்டியலிலும் இருக்கிறார்.

2023, 2024 ஆண்டுகளில் சுவிசில் நான்கு நிறுவனங்கள் இவருக்கு வேலை கொடுத்தன. லொசேன் (Lausanne), பெர்ன் (Bern), பாசல் (Basel), நொய்ஷாட்டல் மருத்துவமனை வலையமைப்பு (RHNE) ஆகியவை அவை. தான் பட்டம் பெற்ற மருந்தாளுநர் என்று இவர் சொன்னார். ஆனால் இவரது சான்றிதழ் போலியானது. அது சுவிசில் அங்கீகரிக்கப்படவும் இல்லை.

மருந்தாளுநர்கள் கிடைக்காத நிலையில், சில நிறுவனங்கள் சான்றிதழ் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்காமல் ஒப்பந்தம் போட்டதாக “Arcinfo” செய்தித்தாளின் விசாரணை சொல்கிறது. RHNE இதை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அவர் தனியாக எந்தப் பணியையும் செய்யவில்லை என்கிறது. பத்திரிகையாளர்கள் கேட்ட பிறகுதான் அவரது கடந்த காலம் தெரிந்தது என்றும், வழக்கை அரசு வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் கூறுகிறது.

சுவிசிலும் இவருக்கு இரண்டு தண்டனைகள் கிடைத்துள்ளன. இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இவர் இருக்கும் இடம் தெரியும். ஆனாலும் ஸ்பெயினுக்கு அனுப்புவதற்காக இவர் கைது செய்யப்படவில்லை. காரணம் தெரியவில்லை. இப்போது சுவிசில் பல மருந்தகங்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டு, வேலைக்கு வரும் விண்ணப்பங்களை கவனமாகப் பார்க்கின்றன.


மூலம்: Le Matin
புகைப்படம்: Humberto Chávez / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button