பேர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள லெங்க் (Lenk) ஊரையும், வலே மாநிலத்தில் (Valais) உள்ள கிரான்-மோன்டானாவையும் (Crans-Montana) இணைக்கும் புதிய கேபிள் காரை அமைக்க முடியும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. முடிவுகள் புதன்கிழமை மாலை லெங்க் மக்களுக்கு விளக்கப்பட்டன.
இந்த கேபிள் கார் சுமார் 10 கிலோமீட்டர் நீளம் இருக்கும். லெங்கிலிருந்து கிரான்-மோன்டானா அருகிலுள்ள பிளேன் மோர்த் பனியாறு (Plaine Morte) வரை சுமார் 30 நிமிடத்தில் போய்விடலாம். ஆண்டு முழுவதும் ஓடும் மலை சுற்றுலா கேபிள் காராக இதைத் திட்டமிடுகிறார்கள்.
இந்த யோசனையைக் கொண்டுவந்தது “கிராடில்” (Cradle) என்ற சங்கம். லெங்க், அடெல்போடன் (Adelboden), கிரான்-மோன்டானா நகராட்சிகளும், அங்குள்ள மலை கேபிள் கார் நிறுவனங்களும், சுற்றுலா அமைப்புகளும் இதில் உள்ளன. இந்த ஆய்வுக்கு 500,000 பிராங்க் செலவானது.
ஆய்வின்படி இரண்டு பாதைகள் சிறந்தவை. இரண்டும் மெட்ஷ் (Metsch) நிலையம் வழியாகப் போகும். பிறகு ஒன்று கிளெட்ஷர்ஹோர்ன் (Gletscherhorn) மலை வழியாகவும், மற்றொன்று வைஸ்ஹோர்ன் (Weisshorn) மலை வழியாகவும் செல்லும். முதல் பாதை இயற்கை பாதுகாப்புப் பகுதியைத் தொடாது. இரண்டாவது பாதையில் பழைய ராணுவ கேபிள் கார் இணைக்கப்படும்.
இது பிராந்தியத்துக்கு பொருளாதார ரீதியில் பெரிய பலன் தரும் என்கிறது ஆய்வு. ஆனால் இயற்கையில் பெரிய தலையீடும் ஆகும் என்றும் சொல்கிறது. இயற்கை பாதுகாப்பு அமைப்புகள் இதை எதிர்க்கின்றன. அதிகம் கை வைக்கப்படாத மலைப் பகுதியின் தோற்றத்தை இது கெடுக்கும் என்கிறார்கள்.
அடுத்து, கட்டுமானத்தின்போதும் ஓட்டத்தின்போதும் என்ன இயற்கை ஆபத்துகள் வரலாம், என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று சங்கம் ஆராயும். வணிகத் திட்டமும் தயாராகும்.
மூலம்: SRF
புகைப்படம்: Muhammad Irfan / Unsplash





