சுவிஸ்ஸில் நவம்பர் 29 அன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடக்கிறது. இன்னும் மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன.
இந்த முறை நான்கு விஷயங்களுக்கு சுவிஸ் குடியுரிமை உள்ளவர்கள் வாக்களிப்பார்கள்.
முதலாவது, விற்பனை வரி (TVA) உயர்வு. முதியவர்களுக்கான 13வது மாத ஓய்வூதியத்துக்குப் பணம் திரட்டவே இந்த வரி உயர்வு. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் AVS.
இரண்டாவது, பட்டாசுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மக்கள் முன்முயற்சி. மூன்றாவது, திருமணமான தம்பதிகளுக்கு மத்திய அரசு வரியில் நியாயம் வேண்டும் என்ற மக்கள் முன்முயற்சி. திருமணம் செய்தவர்களுக்கு வரியில் காட்டப்படும் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பது இதன் கோரிக்கை.
நான்காவது, போர் ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றம்.
“20 minutes” மற்றும் Tamedia ஊடக நிறுவனங்கள் இது குறித்து இணையத்தில் கருத்துக் கணிப்பு நடத்துகின்றன. நீங்கள் என்ன வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை அங்கே பதிவு செய்யலாம்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Element5 Digital / Unsplash





