சுவிஸ்ஸின் அப்பென்செல் இன்னர்ரோடன் மாநிலத்தில் (Appenzell Innerrhoden) மூன்று லிங்க்ஸ் காட்டுப்பூனைகள் இறந்து கிடந்தன. ஒபெரெக் பகுதியில் (Oberegg) ஒரு சாலைக்கு அருகில் அவை கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவை ஒரு தாய் லிங்க்ஸ், அதன் இரண்டு குட்டிகள். குட்டிகள் இந்த வருடம் பிறந்தவை என்று மாநில போலீஸ் சொல்கிறது.
தகவல் கிடைத்தவுடன் வனவிலங்குக் காவலர் ஒருவர் உடனே அந்த இடத்துக்குப் போனார். வேட்டை மற்றும் மீன்பிடி விவகாரங்களைக் கவனிக்கும் மாநில அலுவலகம் போலீசிடம் புகார் கொடுத்துள்ளது.
சுவிஸ்ஸில் லிங்க்ஸ் பாதுகாக்கப்பட்ட விலங்கு. அதனால் அவற்றைச் சுடுவது அல்லது கொல்வது சட்டப்படி குற்றம். இவை எப்படி இறந்தன என்பது இன்னும் தெரியவில்லை. சட்டவிரோத வேட்டைக்காரர் யாராவது இதைச் செய்திருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூலம்: SRF
புகைப்படம்: Eirik Olsen / Unsplash





