சுவிஸ்

டிச்சினோவில் சிக்குன்குனியா காய்ச்சல் – 4 பேருக்குத் தொற்று உறுதி

சுவிஸின் டிச்சினோ மாநிலத்தில் (Ticino) சிக்குன்குனியா காய்ச்சல் 4 பேருக்கு உறுதியாகியுள்ளது. மகடினோ சமவெளிப் பகுதியில் (Piana di Magadino) இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த 4 பேரும் சமீபத்தில் வெளிநாடு எதுவும் போகவில்லை. அதாவது, தொற்று சுவிஸிலேயே பரவியிருக்கிறது. இப்போது அவர்கள் நலமாக இருக்கிறார்கள். மூட்டுகளில் மட்டும் சிறிது வலி உள்ளது.

இந்த நோய் புலிக்கொசு (tiger mosquito) மூலம் பரவுகிறது. தொற்று உள்ளவரைக் கடித்த கொசு, அடுத்தவரைக் கடிக்கும்போது நோயைப் பரப்புகிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவாது.

காய்ச்சலும் மூட்டு வலியும் முக்கிய அறிகுறிகள். சிலருக்குத் தசை வலி, தலைவலி, தோலில் தடிப்புகளும் வரலாம். பெரும்பாலானோர் எளிதாகக் குணமடைவார்கள். தீவிரமாகப் பாதிப்பது அரிது.

மக்களுக்கு ஆபத்து மிகவும் குறைவு என அதிகாரிகள் சொல்கிறார்கள். கொசுக் காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அதனால் சிறப்பு நடவடிக்கை எதுவும் தேவையில்லை.

வெப்பமண்டல நாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்குக் காய்ச்சல், மூட்டு வலி அல்லது தோல் தடிப்பு இருந்தால் டாக்டரைப் பார்க்க வேண்டும். திரும்பிய முதல் 14 நாட்களுக்குக் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: National Institute of Allergy and Infectious Diseases / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button