
செம்மணிப் புதைதழியின் பின்னணி யில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம். அத்துடன் இந்தப் புதை குழியானது சமய ரீதியிலான இறுதிச் சடங் குகள் இடம்பெற்றன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களையும் கொண்டுள்ளது-இவ்வாறு பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழி தொடர்பான தடய வியல் அறிக்கை பேராசிரியர் ராஜ் சோம தேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதி மன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய மான அம்சங்களாவன.
செம்மணிப் புதைகுழியானது உலகின் பல பகுதிகளில் அவதானிக்கப்பட்ட சர்ச் சைக்குரிய மனிதப் புதைகுழிகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபா டுகளைக் காண்பிக்கின்றது. குறிப்பாக சரியான முறையில் அடக்கம் செய்யப்ப டும் சூழமைவுகளுடன் ஒப்பிடுகையில் அந்தப் புதைகுழி குறிப்பிட்டுக் கூறக் கூடிய அதிக ஒற்றுமைகளை வெளிப் படுத்துகின்றது. இறந்தவர்களின் அதிக அடர்த்தியானது சடலங்கள் எந்தச் சூழ்நி லையில் அடக்கம் செய்யப்பட்டன என் பதை முறையாகவும், துல்லியமாகவும் நிரூபிக்கவில்லை. அவ்வாறு நிரூபிப்ப தற்குத் தேவையான ஆதாரபூர்வ விட யங்கள் தென்படவில்லை.
செம்மணிப் புதைகுழியில் இருந்து அதி களவான என்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட மைக்குக் காரணம் இதன் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேர ழிவு என்பன இருந்திருக்கலாம். ஆத லால் சடலங்களை முறையாக அப்புறப் படுத்துவதிலும் பார்க்க அதிவிரைவாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை அக் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இறுதிச் சடங்கில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அதிகளவில் மீட்கப்படாமைக்கு இது வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இதுவரை மீட்கப்பட்ட சில தட யங்கள், அங்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
ஆடைகள் இல்லாமை ஏன்?
செம்மணியில் அகழாய்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எதிலும், எலும்பு எச்சங்களுடன் இணைந்த நிலையில் நேரடியாகப் பாதுகாக்கப்பட்ட ஆடைகளுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், துணிப் பொருள்கள் எஞ்சியிருக்கவில்லை என்பதற்காக, இறந்த வர்கள் ஆடையின்றி அடக்கம் செய்யப் பட்டனர் என்று பொருள் கொள்ளக் கூடாது. துணிகள் உள்ளிட்ட கரிமப் பொருட்கள், சாதகமற்ற அடக்கச் சூழல் களில் சிதைவடையக்கூடியவை. அவை பாதுகாக்கப்படுவதில் அவற்றைச் சூழ்ந் துள்ள மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், ஈரப்பதத்தின் அளவு, நுண்ணுயிர்களின் செயற்பாடு மற்றும் அடக்கம் செய்யப்பட்டு இருந்த கால அளவு ஆகியன பெரும் செல்வாக் குச் செலுத்துகின்றன.
சில சந்தர்ப்பங்களில், மனித எலும்புக் கூடுகளுடன் தொடர்புடைய இடங்களில் பொத்தான்கள், பொத்தான் துளை வளையங்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படும் சிறிய உலோகப் பொருத்திகள் ஆகியவை கண்டெடுக்கப் பட்டன. அவை குறைந்தபட்சம் சிலர் அடக்கம் செய்யப்பட்டபோது ஆடை அணிந்திருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய சான்றுக ளாக அமைகின்றன. எனவே, செம்மணி யில் பாதுகாக்கப்பட்ட துணி எச்சங்கள் கிடைக்காத நிலையை, அடக்கம் செய் யப்பட்ட காலத்தில் ஆடைகள் இல்லாதி ருந்ததற்கான உறுதியான சான்றாகக் கருதாமல், எச்சங்கள் காலப்போக்கில் சிதைவடைந்ததன் விளைவாக ஏற்பட்ட தொல்லியல் அவதானிப்பாக கருத வேண்டும்- என்றுள்ளது.
செம்மணி என்பு ஆய்வுக்கு அடுத்தவாரம் நிபுணர் குழு
சட்ட மருத்துவ அதிகாரி தகவல்
செம்மணிப் புதைகுழி யில் மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் தொடர்பான ஆய்வுக்காக அடுத்த வாரமளவில் நிபுணர் குழு அமைக்கப்படும் என்று சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தெரிவித்தார்.





