இலங்கை

இலங்கையில் ஊழலை எதிர்க்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட குழு அமைப்பு

பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கு அமைய, ‘2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின்’ கீழ் பாராளுமன்றத்துக்கு பொறுப்பளிக்கப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அதற்கான தலைமையை வழங்குவதற்காக குழுக்களின் பிரதித் தலைவரின் தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இக்குழுவிற்காக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதியமைச்சர் சுனில் வடகல, பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே. சி. அலவத்துவல, அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், ஓஷனி உமங்கா, பிரகீத் மதுரங்க, சந்திமா ஹெட்டியாரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, தேவானந்த சுரவீர மற்றும் எம். நிஸாம் காரியப்பர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button