இலங்கை

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கைதாகிய காரணத்தை வெளியிட்டது லஞ்ச ஊழல் ஆணைக்குழு

சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் கொள்வனவு செய்வதற்காகப் பெறப்பட்ட 1 கோடி ரூபா நிதி தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டில், இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கணினிமயமாக்கப்பட்ட துணுக்குப் படமாக்கல் (CT) ஸ்கேனர் ஒன்றை வழங்குவதாகக் கூறி, சிறிலிய சவிய அமைப்பின் ஊடாக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து இந்த 1 கோடி ரூபா பெறப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், அந்த நிதியைப் பயன்படுத்தி வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் வழங்கப்படவில்லை என்றும், அரச நிதி நேர்மையற்ற முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிதி தொடர்பாக ஊழல் குற்றத்திலும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றங்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை சுமார் 9.56 மணியளவில், கிருலப்பனையில் உள்ள பூர்வாராம பகுதியில் அமைந்துள்ள இல்லமொன்றில் வைத்து ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button