இந்தியாஉலகம்

‘நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய “ஹீரோ” – விமானத்தில் காயமடைந்த இந்திய விமானிக்கு பிரதமர் மோடி பாராட்டு

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தில் இணை விமானியால் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய “ஹீரோ” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

அக்டோபர் 1ஆம் திகதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் மோடி, “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலும், கடுமையாக காயமடைந்த போதிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர் அளவற்ற துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.

“அவரது வீரத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரிய பேரழிவும் தவிர்க்கப்பட்டது. இந்தியா கேப்டன் மச்சாரை எண்ணி பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடைந்து, முழு உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button