உலகம்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் எகிறியது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 1.08% உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், BRENT ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் விலை உயர்வு 1.60% ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button