அரசியல்இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக சஜித் தலைமையில் போராட்டம்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பத்தரமுல்லையில் நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை) போராட்டமொன்றை முன்னெடுத்தது.

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பொல்துவ சந்திக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாது பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றார்.

முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளதுடன், அதனை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதற்கிடையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவாதம் நாளை வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.

இதேவேளை, முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்திற்கு பொதுசன வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும், நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button