தமிழீழம்

செம்மணி மனித படுகொலை – சர்வதேச விசாரணை கோரி யாழில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு

செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளில் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

 

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே பேரணி நடைபெறவுள்ளது.

நல்லூர்  பகுதியில் அமைந்துள்ள , ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி , கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.

இந்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால்   இன்று சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு தூண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button