இலங்கை

டென்னிஸ் மைதானத்தின் ‘ராஜா’ ஃபெடரர் கண்ணீருடன் பெற்ற உயரிய கௌரவம்!

 

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற டென்னிஸ் புயல் ரோஜர் ஃபெடரர் (Roger Federer), டென்னிஸ் விளையாட்டின் மிக உயரிய விருதான ‘ஹால் ஆஃப் ஃபேம்’ (Hall of Fame) கௌரவத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்!

அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் (Rhode Island) மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது. மார்ட்டினா ஹிங்கிஸுக்குப் பிறகு இக்கௌரவத்தைப் பெறும் 2-வதுசுவிற்சர்லாந்து வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெகிழ வைத்த மனைவியின் பேச்சு… உடைந்து அழுத ஃபெடரர்!

விழாவில் ஃபெடரரின் மனைவி மிர்கா (Mirka), தனது கணவரின் மனிதநேயப் பண்புகளையும், அவரது கடின உழைப்பையும் நெகிழ்ச்சியுடன் மேடையில் பேசினார்.

அதன்பின் மேடை ஏறிய ஃபெடரர், தனது விளையாட்டு வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தபோது, கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். மைதானத்தில் எதிராளிகளைத் திணறடித்த நாயகன், மேடையில் அன்பால் உருகிய காட்சி ரசிகர்களின் இதயங்களை நெகிழ வைத்துள்ளது!

#RogerFederer #HallOfFame #TennisLegend #Federer #MirkaFederer #SRFSport #TennisNews #EmotionalMoment #SwissLegend #TennisLove

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button