இலங்கைஉலகம்

ஆஸ்திரேலியாவிலிருந்து கொழும்புக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை – நாளை முதல் ஆரம்பம்

ஆஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Jetstar Airways, நாளை (25) முதல் மெல்போர்ன் – கொழும்பு இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு Jetstar நிறுவனம் தனது முதல் விமான சேவையைத் தொடங்குகிறது.

முதல் JQ5 விமானம் மெல்போர்னில் இருந்து நண்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.50 மணிக்குபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் கொழும்பிலிருந்து புறப்படும் JQ6 விமானம் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.00 மணிக்குமெல்போர்னை சென்றடையும்.

இந்த புதிய விமானப் பாதையில் வாரத்திற்கு மூன்று முறை — செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் — Boeing 787 Dreamliner விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button