உலகம்

நியூசிலாந்திலும் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.

இந்த சட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் சர்வதேச வருவாயில் (Global Revenue) 10% வரை அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விதிகளை மீறுபவர்களுக்கு அந்தத் தளத்தின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் இன்று(24) தெரிவித்தார்.

இந்த மசோதாவின்படி, சமூக ஊடகத் தளங்கள், ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முகத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நியாயமான நடவடிக்கைகளை எடுத்துப் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என கூறினார்.

நியூசிலாந்து குழந்தைகளின் இழைக்கப்படும் தீங்கை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று லக்ஸன் கூறினார்.

சமூக ஊடகங்கள் அவர்களைத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், அடிமையாக்கும் தொழில்நுட்பம் மற்றும் அவர்களால் சமாளிக்க முடியாத அழுத்தங்களுக்கு உள்ளாக்குகின்றன. மேலும் இது அவர்களின் குடும்ப வாழ்க்கை, மனநலம், உறக்கம் மற்றும் கல்வியைப் பாதிக்கிறது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறப் போதுமான ஆதரவைப் பெறுமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், லக்ஸனின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ கட்சி, இதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button