இலங்கை

மட்டக்களப்பில் பாரம்பரிய அரங்க விழா 2026 வெகுசிறப்பாக இடம்பெற்றது.

 

தாயகத்தில் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய “பாரம்பரிய அரங்க விழா 2026 – ஆற்றுகைகளின் வியாரம்” கடந்த ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

பாரம்பரிய கலைகளையும் கூத்து மரபுகளையும் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், இரு நாட்களிலும் பல்வேறு சிறப்புமிக்க அரங்க ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டன:

• ஆகஸ்ட் 04 (செவ்வாய்க்கிழமை):

• காலை 10:00 – 11:30: விழா ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நுண்கலைத்துறை மாணவர்களால் ‘வீரபத்திரர் வசந்தன் கூத்து’ அரங்கேற்றப்பட்டது. (அண்ணாியார்: சி. அலெக்சாண்டர், இணைப்பாக்கம்: திருமதி து.சத்தியஜித்).

• மாலை 05:00 – 07:00: நுண்கலைத்துறை மாணவர்களின் ‘மகிடித் கூத்து’ ஆற்றுகை இடம்பெற்றது (இணைப்பாக்கம்: கலாநிதி சு.சந்திரகுமார்).

• இரவு 09:00: கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிபாடசாலை மாணவர்களின் ‘ஆருமையாள் ஒளவை’ வடமோடி கூத்து நடைபெற்றது (அண்ணாியார்: சி. ஞானசேகரம், இணைப்பாக்கம்: திருமதி தே.அருட்ஜோதி, து.கௌரீஸ்வரன்).

• ஆகஸ்ட் 05 (புதன்கிழமை):

• இரவு 09:00: நுண்கலைத்துறை மாணவர்கள் வழங்கிய ‘மஞ்சளழகி’ வடமோடி கூத்து ஆற்றுகையுடன் விழா இனிதே நிறைவுற்றது (அண்ணாவியார்: சி. அலெக்சாண்டர், ஏடுபார்ப்பவர்: திரு முத்துலிங்கம், இணைப்பாக்கம்: கலாநிதி சு.சந்திரகுமார்).

இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இக்கலை ஆற்றுகைகளை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button