இலங்கைதமிழீழம்தமிழ்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மதகுருக்கள் போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் யாழில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமான பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.

பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் திரு. டெர்க்கிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்தார்.

இப்போராட்டத்தில் யாழ்ப்பாண மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாண மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் என பலர் கலந்துகொண்டனர்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button