இலங்கைகனடாதமிழீழம்

மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார்.

 

இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமாவார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் ,கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button