இலங்கைதமிழீழம்தமிழ்

யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு

1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

 

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி ந. ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல் பீட விரிவுரையாளர் விக்னேஸ்வரன் சிறப்புக் கருத்துரையாற்றினார்.

நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் மற்றும் நினைவுப் பதிவுகளை எதிர்காலச் சந்ததியினருக்காக போதுமான அளவில் பாதுகாத்து வைக்கத் தவறியுள்ளோம்.

குறிப்பாக, யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற நிகழ்வுகளுக்குக்கூட போதுமான சான்றுப் பொருட்கள் இன்று பாதுகாக்கப்படவில்லை, இனி வரலாற்றுச் சான்றுகளை முறையாக சேகரித்து பாதுகாப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button