உலகம்

ஆயுதம் வழங்கக் கூடாது! சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப் தனது சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனா அல்லது ரஷ்யா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அந்த நாடுகளின் நலன்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா மறைமுகமாக ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button