இலங்கைதமிழ்

யாழில் சிறுமியை வன்புணர்ந்துவிட்டு பிரான்ஸுக்கு தப்பிச்சென்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை – கைது செய்ய நடவடிக்கை

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது.

16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர் , சிறுமி 06மாத கர்ப்பமாக இருக்கும் போது , சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் எதிரி இன்றி , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில் எதிரியை குற்றவாளியாக கண்ட மன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளி தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்த மன்று , பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களுக்கும் குற்றவாளி தொடர்பில் அறிவிக்குமாறு மன்று கட்டளையிட்டது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button