
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை நியமித்த குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள PTA-வை ரத்து செய்வதற்கான தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“புதிய சட்டத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து செய்யப்படும்” என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், PTA-வின் கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், தொடர்புடைய உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
எனினும், பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், அந்த விடயத்தில் நீதித்துறை சுயாதீனமாக செயல்படுகிறது என்றும் நீதியமைச்சர் வலியுறுத்தினார்.





