உலகம்கனடா

‘அமெரிக்காவே காரணம்’ – டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கனடா பதிலடி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button