இந்தியாஇலங்கை

காரைக்கால் – காங்கேசன்துறை – திருமலையை இணைக்கும் சரக்கு கப்பல் சேவை செப்ரம்பரில்

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை (KKS) மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும் இணைக்கும் புதிய Container சரக்கு கப்பல் சேவை 2026 செப்ரெம்பர் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த சேவையை சென்னையை தலைமையாக கொண்ட Connect Maritime LLP நிறுவனம், அதன் இலங்கை முகவரான IndSri Ferry Services Lanka Pvt. Ltd. மூலம் இயக்கவுள்ளது.
இச் சேவையின் முக்கிய அம்சங்களாக,
FCL (Full Container Load) மற்றும் LCL (Less than Container Load)சரக்கு போக்குவரத்து வசதி.
வாரந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட கப்பல் சேவை
போட்டித்தன்மை வாய்ந்த சரக்கு கட்டணங்கள்.
பாதுகாப்பான Container கையாளும் வசதிகள்.
இந்த சேவைக்குM/VBeypore_Sultan என்ற சரக்கு கப்பல் பயன்படுத்தப்படும்.
இது 2023 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
81 TEU** (கண்டெய்னர்) கொள்ளளவு.
 1,600 மெட்ரிக் தொன்** Deadweight திறன்.
 பாக்கு நீரிணையை கடந்து 7 நாட்கள் சுழற்சி (weekly rotation) அடிப்படையில் இயங்கும்.
நிறுவனம் வெளியிட்ட தற்காலிக அட்டவணையின்படி
2026 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
காரைக்காலிலிருந்து வாரந்தோறும் புறப்பட்டு KKS-ஐ சென்றடையும்.
2026 டிசம்பர் இறுதி வரை தொடர்ச்சியான பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
சரக்கு கட்டணங்கள்
ஒரு கண்டெய்னருக்கு US$650–675
முன்பதிவு (Prepaid booking) அவசியம்.
பாண்டிச்சேரி வழியாக CFS சுங்க அனுமதி.
முதல் 3 நாட்களுக்கு Container Demurrage கட்டணம் இல்லை
சேவை தொடங்குவதற்கு முன், யாழ்ப்பாணத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button