உலகம்சர்வதேசம்

ஓமன் கடலில் கப்பல் மீது தாக்குதல்;10 இந்தியர்கள் மீட்பு -ஒருவர் மாயம்! இந்தியா கண்டனம்

ஓமன் கடற்கரை அருகே ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி என்கிற வணிக கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஒருவரை மட்டும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“ஓமனில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்திய நிகழ்வுகளைக் உன்னிப்பிக்காக கண்காணித்தும் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கியும் வருகிறது,” என வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

மேலும், “இந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஓமன் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும்.” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தப் பிராந்தியத்தில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் உள்ள பதற்றங்களை உடனடியாக தணிக்க வேண்டும் என்றும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்த தற்போதைய பேச்சுவார்த்தைகள் ஒரு ராஜ்ஜிய தீர்வை நோக்கி நகர வேண்டும் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.” என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின்படி, (சென்ட்காம்) சைப்ரஸ் கொடி ஏந்திய ஜிஎஃப்எஸ் கேலக்ஸி வணிக கப்பல் ஹோர்மூஸ் நீரிணையில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (ஐஆர்ஜிசி) தாக்கப்பட்டது.

கப்பலிலிருந்த பணியாளர்களில் ஒருவரைக் காணவில்லை என சென்ட்காம் தெரிவிக்கிறது. கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் என்ஜின் அறைக்கு ஏற்பட்ட பலத்த சேதத்தால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை எனவும் கூறியுள்ளது.

இந்தநிலையில் இரானில் 140 ராணுவ நிலைகளை இலக்கு வைத்ததாக சென்ட்காம் தெரிவிக்கிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button