உலகம்சர்வதேசம்

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 8 ஈரானிய இராணுவத்தினர் பலி!

இன்று ஈரானை தாக்குவோம் என ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் திடீர் தாக்குதல்

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக நேட்டோ உச்சிமாநாட்டின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது.

இன்று இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என பல ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button