இலங்கை

IMF பணிக்குழாமின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கு சென்றிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாம், தங்களது கலந்துரையாடல்களை முடித்துக்கொண்டு இன்று (30) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.

 

 

 

இந்நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்வதும், ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்’ கீழ் நடக்கும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவது இதன் முக்கிய நோக்கமாகும்.

 

 

 

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட்டதாக, IMFஇன் இலங்கைக்கான பிரதானி ஈவன் பெபஜியோர்கியு தெரிவித்துள்ளார்.

 

 

 

அத்துடன், நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே, இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பலம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button