உலகம்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

அமெரிக்கா துணை ஜனாதிபதி வான்ஸ் தமது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்தி வைத்துள்ளதால் அமெரிக்கா – ஈரான் பேச்சு வார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

அமெரிக்கா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. ஜனாதிபதிகள் ட்ரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

 

 

இதையடுத்து இன்று (19) சுவிட்சர்லாந்திலுள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 

 

 

இந் நிலையில், இந்த முக்கியமான பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து செல்லாததே இதற்கு காரணமாகும்.

 

 

 

வான்ஸ் பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்து பயணிக்க மாட்டார், அதற்கான பேச்சுவார்த்தை கணிக்கக்கூடியதாக இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கின்றது.

 

 

 

வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு சிலமணி நேரங்கள் முன்னதாக, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய லெபனான் ஊடகங்கள் கூறியிருந்தன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button