இலங்கைதமிழீழம்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

 

இந்த நிகழ்வு நேற்று (18) காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

 

 

 

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.

 

 

 

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும், மூன்று படகுகளும், நெடுந்தீவிற்கு இரண்டு படகுகளும், காரைநகருக்கு ஒரு படகும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பதின்மூன்று படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button