
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இலங்கை செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் செயலற்ற பார்வையாளராக இல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டத்தில் தீவிரமான தலைவராக மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பு (LEARN) ஏற்பாடு செய்த தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடர்பான பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ. என்பது உலக பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் போட்டியின் மையக் கூறாக மாறியுள்ளது என்றும், இலங்கை தாமதமின்றி மூலோபாய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம், அரசாங்கம், கல்வித்துறை மற்றும் தனியார் துறையைக் ஒருங்கிணைத்து AI வளர்ச்சியை முன்னெடுக்க முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்





