இந்தியா

இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்

இந்திய இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி ஜூன் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவதையடுத்து, புதிய இராணுவத் தலைமைத் தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.

 

 

 

அதன்படி தற்போது ராணுவ துணைத் தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ராணுவ தலைமைத் தளபதியாக பதவி உயர்வு பெறுகிறார். ஜூன் 30 ஆம் தேதி அவர் பதவியேற்கிறார். முன்னதாக அவர் தென் மேற்கு கமாண்ட் தலைவராக இருந்தார்.

 

 

 

புணே கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவர் ஆவார். சுமார் 40 ஆண்டுகளாக இராணுவப் பணியில் இருக்கிறார். இராணுவ நவீனமயமாக்கல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button