இலங்கை

மத்திய மலைநாட்டு பாதுகாப்பில் விசேட கவனம் – உலக சுற்றாடல் தின செய்தி

சுற்றாடல் என்பது நமது இருப்பின் அஸ்திவாரமாகும். அந்த வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பான, வளமான அதே நேரத்தில் பசுமையான பூமியைப் பரிசாக கொடுக்க வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். என பிரதமர் காலநிதி ஹரிணி அமசூரிய தனது உலக சுற்றாடல் தின வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

 

 

 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

 

 

“Urgent Climate Action” – “அவசர காலநிலை நடவடிக்கை” எனும் உலகளாவிய கருப்பொருளுக்கு இணங்க, ” நிலையான உயிர்க்கோளம் – பசுமையான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இலங்கை இவ்வருடம் உலக சுற்றாடல் தினத்தை மிகவும் நெருக்கடியானதொரு காலப்பகுதியிலேயே கொண்டாடுகின்றது.

 

 

 

அண்மையில் நாம் எதிர்கொண்ட காலநிலை சவால்களிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில், மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் மண்டலத்தை மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

 

சுற்றாடல் அமைச்சினால் இவ்வருட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு “முளைப்பதற்கு இடமளிப்போம்” (Let it sprout) என்ற கருப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடைமுறை வேலைத்திட்டங்கள் ஊடாக, சமயக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு, தியவன்னா ஓயாவைப் பாதுகாத்தல், வனஜீவராசிகள் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நீர் மூலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மூலிகைப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு என்பதை வெறும் எண்ணக்கருவாக மாத்திரம் மட்டுப்படுத்தாது நடைமுறைச் செயற்பாடாக மாறியிருப்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

 

 

 

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட “வனஸ்பதி” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக இதுவரை அறுபத்து மூவாயிரம் ஹெக்டேயருக்கும் அதிகமான காடுகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு நமது நாடு வரலாற்றில் பதியப்படுகின்ற இந்த முக்கியமான தருணத்தில், நாட்டு மக்கள் என்ற வகையில் சுற்றுச்சூழலுடன் இசைந்து வாழ்வதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்ளுதல் வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button