இலங்கை

இந்திய கடற்படையின் சர்துள் கப்பல் கொழும்புக்கு விஜயம்

  1. இந்திய கடற்படையின் சர்துள் ரக தரையிறங்கிக் கப்பல் 2026 இன்று (02) முதல் 04ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த விஜயத்தின்போது கப்பலுக்கான எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி திட்டத்தின் கீழ் இலங்கை கரையோரக் காவல் படைக் கப்பலான ‘சுரக்‌ஷா’வுக்கான முக்கிய உதிரிப் பாகங்களும் கொண்டு வரப்படவுள்ளன.

 

 

 

அத்துடன், இலங்கை கடற்படையுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கடற்கரை தூய்மையாக்கல் பணிகள் போன்ற செயல்பாடுகளிலும் இந்திய கடற்படை ஈடுபடவுள்ளது.

 

 

 

இந்த விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button