
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய (29) வர்த்தக நடவடிக்கைகள் கணிசமான வளர்ச்சியுடன் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் குறியீடு 111.57 புள்ளிகளால் அதிகரித்து, 22,310.80 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, இன்றைய தினத்தின் ஒட்டுமொத்த புரள்வு 7.4 பில்லியன் (740 கோடி) ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன





