உலகம்

இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.

 

இதற்காக அவர் இன்று முற்பகல் 10 மணிக்கு தனி வானூர்தி மூலம் டெல்லிக்குப் புறப்படவுள்ளார்.

 

அத்துடன் தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் மோடியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

 

தமிழகத்தில் அரசியல் சூழல் அடுத்தடுத்து பரபரப்பாகக் காணப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான முதலமைச்சர் விஜய்யின் குறித்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button