இந்தியா

முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் : சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

திடீரென உருவாகி வேகமாக வளர்ச்சி பெற்ற ஓடிடி (OTT) சந்தை தற்போது சரிவைச் சந்தித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

 

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசு தனியாக ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

ஒரு கட்டத்தில் ஓடிடி சந்தை திடீரென உருவாகி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அந்த சந்தை திடீரென சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் திரைப்படத் துறை மிகுந்த குழப்பத்தில் உள்ளது.

வெகு ஆண்டுகளுக்கு முன்பே திரையரங்கு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார்.

 

விஜய் சேதுபதியின் இந்த கருத்து தற்போது திரைப்படத் துறையிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button