
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவர் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாகக் காவல்துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார், அதற்கான பின்னணி என்ன என்பது குறித்த மேலதிக விபரங்களை அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.





