
சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு நெல்லின் விலை 100 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசிக்கு மாற்றீடாக, வெளிநாட்டில் இருந்து கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையே இந்த நிலைமைக்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனக் கூறி, கடந்த மாதத்தில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் காரணமாக, தங்களது பெரும் போக அறுவடையை விற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக விவாசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





