நேற்றைய தினம் (16.05.2025) சூரிச் மாநிலத்தில் நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் எமது அடுத்த தலைமுறைக்கும், வேற்று நாட்டவர்களுக்கும் தமிழீழத்தில் இலங்கை அரசினால் முள்ளிவாய்க்கால் மண் வரை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழின அழிப்பின் உச்சம் பற்றிய விபரங்களையும் விபரிக்கும் வகையில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வினை போராளிகள் கட்டமைப்பு – சுவிஸ் ஒழுங்குசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டில் பிறந்த இளைய தலைமுறையினர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் விபரங்கள் அடங்கிய தமிழ் – யேர்மன் துண்டுப்பிரசுரங்களை தொடர்புடைய எமது அடுத்த தலைமுறைக்கும், வேற்று நாட்டவர்களுக்கும் வழங்கி அவை தொடர்பான விபரங்களையும் விளக்கியிருந்தனர்.
தாயகத்தில் அனைத்து பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சமவேளையில் சுவிஸ் நாட்டிலும் இவ்வாற நிகழ்வுகள் இடம்பெறுவது சிறப்பாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நிகழ்வினை பார்வையிட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


அங்கு வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் உள்ளடக்கம் கீழே:
முள்ளிவாய்க்கால் கஞ்சி: “ஒரு இனத்தின் கண்ணீரும் எழுச்சியும்”
“பசியால் துடித்த வயிறுகளுக்கு அன்று அது வெறும் உணவல்ல… எம் மக்களின் உயிர் ஆகாரம்!”
வரலாற்றுப் பின்னணி
2009-ஆம் ஆண்டு சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழீழ தேசத்தின் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இறுதிப் போர்.
நாலாபுறமும் சூழ்ந்திருந்த இராணுவம், வானிலிருந்து பொழிந்த கொத்துக்குண்டுகள் மற்றும் கடலில் இருந்து ஏவப்பட்ட பீரங்கி குண்டுகளாலும் மண்ணுக்குள் புதைந்த பதுங்குகுழிகள் என முள்ளிவாய்க்கால் ஒரு மரண பூமியாகக் காட்சியளித்தது. மருந்து இல்லை, பணத்திற்கு மதிப்பில்லை, உணவுக்கு வழியில்லை என ஒரு தேசமே முடக்கப்பட்ட இருண்ட காலம் அது.
ஏன் இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’?
உணவு விநியோகம் பௌத்த பேரினவாத அரசால் திட்டமிட்ட வகையில் தடை செய்யப்பட்ட நிலையில், வன்னிப் பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் உயிர் பிழைப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் உப அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியதே இந்த ஜீவாமிர்தம்.
• மூலப்பொருள்: சிறிதளவு அரிசி, கிடைத்தற்கரிய உப்பு, பெருமளவு நீர்.
•நோக்கம்:
பட்டினி சாவின் விளிம்பில் இருந்த தமிழினத்தின் அழிவை தடுத்து நிறுத்தல்.
மறக்க முடியாத பேரவலம்
இந்த ஒரு வாய் கஞ்சிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும், சிறுவர்களும் ஏராளம். கஞ்சியை வாங்கி ஒரு வாய் பருகுவதற்குள், சிங்கள வான்படை வீசிய குண்டுகளால் சரிந்த உயிர்கள் ஆயிரமாயிரம். சிசுவின் பசியாற்றும் முன்பே வயிறு கிழிந்து சிதறிய அந்தப் பேரவலத்தின் நினைவழியா வலிகள், இன்று எம் தலைமுறையின் வாழ்வினில் ஆறாத வடுக்களாக பதிந்துள்ளது.
ஏன் நாம் இதனை நினைவுகூர வேண்டும்?
முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வெறும் உணவுப் பண்டமல்ல; அது:
• எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் சாட்சி.
• நீதி கோரிப் போராடும் எம் இனத்தின் வலிகொண்ட அடையாளம்.
• உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கும் வரலாற்றுப் பதிவு.
எம் கடமை:
நீதிகேட்டுப் போராடும் எம் மக்களின் குரல் உலகெங்கும் ஒலிக்கும் வரை, இந்த “முள்ளிவாய்க்கால் கஞ்சி” ஒரு பெருவலியாகவும், எமது போராட்டத்தின் வலிமையான அடையாளமாகவும் என்றும் நிலைத்து நிற்கும்.
வரலாற்றை மறக்காதிருப்போம்! எமது உரிமையை மீட்டெடுப்போம்!
Mullivaikkal Kanji: „Die Tränen und das Wiedererwachen einer Nation“
„Für die vor Hunger zitternden Mägen war es damals nicht bloß Nahrung… es war das pure Fundament für das Überleben unseres Volkes!“
Historischer Hintergrund
Das Jahr 2009 markierte die Endphase des genozidalen Krieges, der vom chauvinistischen sri-lankischen Staat systematisch gegen die Nation Tamil Eelam geführt wurde.
Von allen vier Seiten vom Militär umzingelt, während Streubomben vom Himmel regneten, Artilleriegeschosse vom Meer her einschlugen und Bunker in der Erde vergraben waren – Mullivaikkal glich einem Land des Todes. Es war eine dunkle Ära, in der eine ganze Nation gelähmt wurde: Es gab keine Medizin, Geld hatte keinen Wert mehr und es gab keinen Zugang zu Nahrungsmitteln.
Was ist dieses „Mullivaikkal Kanji“?
Da die Lebensmittelversorgung durch den buddhistisch-chauvinistischen Staat absichtlich blockiert wurde, taten sich die Liberation Tigers of Tamileelam (LTTE) zusammen mit ihren Hilfsorganisationen hervor, um dieses Lebenselixier zu erschaffen und das Überleben der rechtmäßigen Bevölkerung der riesigen Vanni-Region zu sichern.
• Zutaten: Eine winzige Menge Reis, spärlich gesalzt und eine große Menge Wasser.
• Ziel: Die Vernichtung des tamilischen Volkes aufzuhalten, das kurz vor dem Hungertod stand.
Eine unvergessliche Katastrophe
Unzählige ältere Menschen, schwangere Frauen und Kinder warteten in langen Schlangen auf nur einen einzigen Schluck dieses Breis. Doch noch bevor sie das Kanji erhalten und einen Schluck nehmen konnten, fielen Tausende von Leben den Bomben der sri-lankischen Luftwaffe zum Opfer. Die unvergesslichen, schmerzhaften Erinnerungen an diese Katastrophe – bei der der Bauch einer Mutter zerrissen und zertrümmert wurde, noch bevor sie den Hunger ihres Säuglings stillen konnte – bleiben als unheilbare Narben im Leben unserer heutigen Generation zurück.
Warum müssen wir dem gedenken?
Mullivaikkal Kanji ist nicht einfach nur ein Nahrungsmittel; es ist:
• Ein absolutes Zeugnis des Völkermords, der an unserem Volk verübt wurde.
• Ein schmerzhaftes Symbol für den andauernden Kampf unserer Nation um Gerechtigkeit.
• Ein historisches Zeugnis, das das Gewissen der Welt erschüttert.
Unsere Pflicht:
Bis die Stimme unseres Volkes, das nach Gerechtigkeit verlangt, auf der ganzen Welt widerhallt, wird dieses „Mullivaikkal Kanji“ für immer als ein Symbol unermesslichen Schmerzes und als ein kraftvolles Emblem unseres Widerstands stehen.
Lasst uns die Geschichte nicht vergessen!
Lasst uns unsere Rechte zurückfordern!
#முள்ளிவாய்க்கால் கஞ்சி
#முள்ளிவாய்க்கால் மே18
#தமிழின_படுகொலை
#மறக்கமுடியா_வரலாறு
#முள்ளிவாய்க்கால்_நினைவேந்தல் #போராளிகள்_கட்டமைப்பு
#தமிழீழம் #Tamileelam
#MullivaikkalKanji
#Mullivaikkal Remembrance
#TamilGenocide
#May18 #JusticeForTamils
#NeverForget_Mullivaikkal
#Mullivaikkal_Genocide
#Remember_Mullivaikkal
#TamilHistory #Zürich #Tamil_Youths #SwissTamilInfo #SwissTamil #சுவிஸ்தமிழர்தகவல்மையம்





